இந்தியா

4 மாத கர்ப்பிணியாக இருந்து காவல்துறை கமாண்டோ.. கணவரால் அடித்து கொல்லப்பட்ட கொடூரம்..!

டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவின் ஸ்வாட் படையில் கமாண்டோவாக பணியாற்றி வந்த 27 வயது கஜல், தனது கணவரால் கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஜனவரி 22-ம் தேதி இரவு நடந்த குடும்பத் தகராறில், அவரது கணவர் அங்குர் ஆத்திரத்தில் கஜலின் தலையை கதவில் மோதியதுடன், உடற்பயிற்சி செய்யும் ‘டம்பல்’ கொண்டு பலமாக தாக்கியுள்ளார்.

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த கஜல், சிகிச்சை பலனின்றி ஜனவரி 27-ம் தேதி உயிரிழந்தார். கஜல் நான்கு மாத கர்ப்பிணியாக இருந்தார் என்பது இந்த துயரத்தை இன்னும் அதிகமாக்கியுள்ளது.

அங்குர் எனது மகளை மட்டும் கொல்லவில்லை, பிறக்காத குழந்தையையும் கொன்று ஒரே நேரத்தில் இரண்டு கொலைகளை செய்துள்ளார்” என்று கஜலின் தந்தை கண்ணீர் மல்க கூறியுள்ளார். 2023-ல் கமாண்டோவாக தேர்வான கஜல், பாதுகாப்பு அமைச்சகத்தில் எழுத்தராகப் பணிபுரியும் அங்குரை 2023-ல் திருமணம் செய்தார்.

திருமணமான 15 நாட்களிலேயே கார் மற்றும் வரதட்சணை கேட்டு கஜலை அங்குர் மற்றும் அவரது குடும்பத்தினர் துன்புறுத்த தொடங்கியதாக கூறப்படுகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்