இந்தியா

பங்குச்சந்தையில் புதியவரி.. இன்ட்ரா டே வர்த்தகர்களுக்கு ஆப்பு வைத்த நிர்மலா சீதாராமன்..!

மத்திய பட்ஜெட் 2026-27 பங்குச்சந்தை வர்த்தகர்களுக்கு, குறிப்பாக ‘ஃபியூச்சர்ஸ் மற்றும் ஆப்ஷன்ஸ்’ பிரிவில் ஈடுபடுபவர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

பங்குச்சந்தையில் நிலவும் அதீத ஊக வணிகத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், பங்குகள் பரிவர்த்தனை வரியை உயர்த்தி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதன்படி, ஃபியூச்சர்ஸ் வர்த்தகத்திற்கான வரி 0.02%-லிருந்து 0.05% ஆகவும், ஆப்ஷன்ஸ் பிரீமியம் மீதான வரி 0.1%-லிருந்து 0.15% ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த வரி உயர்வு குறுகிய கால வர்த்தகர்கள் மற்றும் தரகர்களின் லாபத்தை பெருமளவில் பாதிக்கும் என்பதால், பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட இன்றைய தினமே சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி கடும் வீழ்ச்சியை சந்தித்தன.

நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு பெரிய பாதிப்பு இல்லை என்றாலும், தினசரி வர்த்தகம் செய்பவர்களுக்கு இது பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. அதேசமயம், வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்திய பங்குச்சந்தையில் முதலீடு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது ஒரு நேர்மறையான அம்சமாக பார்க்கப்படுகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்