உலகம்

இந்தியா அப்படி எங்ககிட்ட எதுவும் சொல்லயே!.. டிரம்ப்பை கடுப்பேத்திய ரஷ்யா!

அமெரிக்க அதிபர் கடந்த சில மாதங்களாகவே சீனா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கும் அதிக வரிகளை விதிப்பதாக மிரட்டி வந்தார்.இந்தியா ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும்.. அது தொடர்ந்தால் இந்தியாவின் பொருளுக்கு 500 சதவீதம் வரி விதிப்பேன் என்றெல்லாம் மிரட்டினார்..

இதன் காரணமாக இந்தியா- அமெரிக்கா இடையே நீடித்து வந்த வர்த்தக உறவில் பாதிப்பு ஏற்பட்டது. அதேநேரம் நேற்று இது தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்க்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. தொலைபேசியில் இருவரும் பேசினார்கள்.

அப்போது இந்த பிரச்சனை சுமுக முடிவு எட்டப்பட்டது. இது தொடர்பாக சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிட்ட டிரம்ப் ‘ ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக இந்தியா சொல்லியிருக்கிறது.. அதனால் இந்தியாவுக்கு அமெரிக்கா விதித்த 25 சதவீத வரியை 18 சதவீதமாக குறைக்கிறேன்’ என பதிவிட்டிருந்தார்..

இந்நிலையில், இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள ரஷ்ய செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் ‘கச்சா எண்ணெய் கொள்முதல் நிறுத்துவது குறித்து இந்தியாவிடமிருந்து ரஷ்யாவிற்கு எந்த செய்தியும் வரவில்லை.. இந்தியாவுடன் எங்களது வர்த்தக கூட்டணி மிகவும் வலுவாக உள்ளது. எரிசக்தி துறையில் இரு நாடுகளின் ஒத்துழைப்பு தொடர்ந்து உறுதியாக நீடிக்கும்’ என கூறியிருக்கிறார்.

இதுபற்றி டொனால்ட் டிரம்ப் நாளை வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்திக்கும்போது கருத்து தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது..

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம்

அமெரிக்காவின் முன்னாள் துணை ஜனாதிபதி டிக் செனி மறைவு

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியாக பதவி வகித்தவர் டிக் செனி.(84) இவர் அமெரிக்காவின் 46வது துணை ஜனாதிபதி ஆவார். குடியரசுக் கட்சியைச் சேர்ந்த இவர் 2001 முதல் 2009-ம்
உலகம்

செய்யாத குற்றத்திற்காக 43 ஆண்டுகள் சிறையில் இருந்த இந்திய வம்சாவளி நபரின் நாடுகடத்தல் நிறுத்திவைப்பு

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 64 வயதான சுப்பிரமணியம் வேதம், தனது நண்பரைக் கொலை செய்ததாக குற்றம்சட்டப்பட்ட வழக்கில் 1980 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை பெற்றார். எந்த