கனடா

கனடா தமிழருக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனை

அமெரிக்காவில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டில், கனடாவின் ரொரன்ரோவில் வசிக்கும் 40 வயதான ரமணன் பத்மநாதன் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். சமூக ஊடகங்கள் மூலம் பல ஆண்டுகளாக 100-க்கும் மேற்பட்ட சிறுமிகளை இலக்காகக் கொண்டு பாலியல் சுரண்டலில் ஈடுபட்டதை ரமணன் ஒப்புக்கொண்டுள்ளார்.

அமெரிக்க ஃபெடரல் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற விசாரணையில், குழந்தை ஆபாசப் படங்களைத் தயாரித்தல் மற்றும் சிறுமிகளை வற்புறுத்தித் தூண்டிய குற்றச்சாட்டுகளை அவர் ஏற்றுக்கொண்டார். ரமணன் சுமார் ஏழு ஆண்டுகள் நீடித்த ஒரு திட்டமிட்ட சதித் திட்டத்தில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. இளம் பெண்களின் நம்பிக்கையைப் பெறுவதற்காக, தன்னை ஒரு அமெரிக்க டீனேஜ் பையனாகச் சித்தரித்து போலி ஆன்லைன் அடையாளத்தை அவர் உருவாக்கியுள்ளார்.

கனடாவில் இதே போன்ற குற்றங்களுக்காக ஏற்கனவே தண்டனை பெற்ற ரமணன் பத்மநாதன், கடந்த டிசம்பர் மாதம் 3-ஆம் திகதி அமெரிக்காவிடம் தற்காலிகமாக சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டார் என அமெரிக்க நீதித்துறை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது. இதன்படி அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

கனடா

சுவீடன் மன்னர் கனடா விஜயம்

சுவீடன் மன்னர் கார்ல் XVI கஸ்டாஃப் மற்றும் மகாராணி சில்வியா நவம்பர் 18ஆம் திகதி கனடாவுக்கு விஜயம் செய்யஉ ள்ளனர். கனடா ஆளுநர் நாயகம் மேரி சைமன்
கனடா

கனடாவில் ஹாலோவின் இனிப்பு பையில் தங்க மோதிரம்

கனடாவின் வின்னிபிக் பகுதியில் ஹாலோவின் இனிப்பு பண்டங்கள் காணப்பட்ட பையொன்றில் தங்க மோதிரம் ஒன்று, பெண்ணுருவருக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. தனது மகளின் ஹாலோவின் இனிப்பு பண்ட பொதியில் இவ்வாறு