சினிமா

சரிதா பண்ண விஷயத்தால் கதிகலங்கிய நடிகர்

80கள் கால கட்டம் என்று சொன்னாலே நாம் நினைவுக்கு வருவது ஸ்ரீதேவி, ஸ்ரீ பிரியா ,ராதா, அம்பிகா ,ராதிகா இவர்கள்தான். அந்த காலகட்டம் முழுவதும் இவர்கள்தான் கோலோச்சி வந்தனர். ஆனால் இவர்கள் அனைவரையும் தன் நடிப்பால் பின்னுக்கு தள்ளிய ஒரு நடிகை என்றால் சரிதாதான். பாக்கியராஜ், சுதாகர், ரஜினி என இவர்களுடன் அதிகமான படங்களில் ஜோடி சேர்ந்து நடித்திருக்கிறார். 80லிருந்து 90கள் காலகட்டம் கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் தான் இவருடைய அந்த சினிமா பயணம்.8

இந்த பத்து ஆண்டுகளில் அவர் நடித்த படங்கள் ஏராளம். அவருடைய தாக்கம் இந்த சினிமாவில் பெரிய அலையை உருவாக்கியது. எதார்த்தமான நடிப்பு, எளிமையான தோற்றம், கருப்பு நிறம், பக்கத்து வீட்டு பெண் போன்ற ஒரு முகம் என அனைவருக்கும் பிடித்த ஒரு நடிகையாக வலம் வந்தவர் நடிகை சரிதா. இந்த நிலையில் நடிகை சரிதாவை பற்றி பிரபல நடிகர் சுதாகர் சொன்ன ஒரு விஷயம் மெய்சிலிர்க்க வைத்தது.

கிழக்கே போகும் ரயில், கல்லுக்குள் ஈரம், எங்க ஊரு ராசாத்தி, பொண்ணு ஊருக்கு புதுசு போன்ற பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்தவர் சுதாகர். நடிகை ராதிகா உடன் பல படங்களில் ஜோடியாக நடித்திருக்கிறார். ராதிகாவுக்கு பிறகு இவருடன் அதிகமாக ஜோடி சேர்ந்து நடித்த நடிகை சரிதா. இவரும் சரிதாவும் சேர்ந்து நடித்த ஒரு படம் பொண்ணு ஊருக்கு புதுசு. இந்த படத்தில் ஒரு காட்சியில் சுதாகரின் கால் நகத்தை கடித்து துப்ப வேண்டும்.

சரிதா உடனே சுதாகரின் காலை பிடித்து கீழே உட்கார்ந்து விட்டாராம். இது சுதாகருக்கு சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஐயோ வேண்டாம் என்று சுதாகர் சொல்ல படத்துக்காக தானே! பரவாயில்லை இருக்கட்டும் என்று சொல்லி சரிதா கீழே உட்கார்ந்து சுதாகரின் கால் நகத்தை கடித்தாராம். இது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது என சரிதாவை பற்றி ஒரு பேட்டியில் சுதாகர் கூறியுள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்