உலகம்

ரூ.580 கோடிக்கு விற்கப்பட்ட .com டொமைன்.. அப்படி என்ன ஸ்பெஷல்?

கிரிப்டோகரன்சி வர்த்தக தளமான Crypto.com-ன் இணை நிறுவனர் கிரிஸ் மார்சலெக், AI.com என்ற டொமைன் பெயரை சுமார் ரூ.580 கோடி கொடுத்து வாங்கியுள்ளார். பொதுவெளியில் அறிவிக்கப்பட்ட டொமைன் விற்பனைகளிலேயே இதுதான் மிக அதிக விலையாகக் கருதப்படுகிறது. வேகமாக வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு சந்தையில் தடம் பதிக்கும் நோக்கில் இந்த அதிரடி முதலீட்டை அவர் செய்துள்ளார்.

இந்த வார இறுதியில் நடைபெறும் ‘சூப்பர் பவுல்’ விளம்பரத்தின் போது AI.com அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட உள்ளது. இந்த தளம் பயனர்களுக்கு தேவையான செய்திகளை அனுப்பவும், செயலிகளை இயக்கவும் மற்றும் பங்குகளை வர்த்தகம் செய்யவும் உதவும் ஒரு தனிப்பட்ட “AI ஏஜென்ட்” ஆக செயல்படும். தொழில்நுட்ப அறிவு அதிகம் இல்லாத சாதாரண மக்களும் எளிதாக பயன்படுத்தும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

“அடுத்த 10 முதல் 20 ஆண்டுகளை கணக்கில் கொண்டால், AI என்பது நம் வாழ்நாளின் மிகப்பெரிய தொழில்நுட்ப அலையாக இருக்கும்” என்று மார்சலெக் தெரிவித்துள்ளார். இந்த விற்பனை முழுவதுமே கிரிப்டோகரன்சி மூலம் பரிமாறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம்

அமெரிக்காவின் முன்னாள் துணை ஜனாதிபதி டிக் செனி மறைவு

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியாக பதவி வகித்தவர் டிக் செனி.(84) இவர் அமெரிக்காவின் 46வது துணை ஜனாதிபதி ஆவார். குடியரசுக் கட்சியைச் சேர்ந்த இவர் 2001 முதல் 2009-ம்
உலகம்

செய்யாத குற்றத்திற்காக 43 ஆண்டுகள் சிறையில் இருந்த இந்திய வம்சாவளி நபரின் நாடுகடத்தல் நிறுத்திவைப்பு

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 64 வயதான சுப்பிரமணியம் வேதம், தனது நண்பரைக் கொலை செய்ததாக குற்றம்சட்டப்பட்ட வழக்கில் 1980 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை பெற்றார். எந்த