சினிமா

20 நாளில் எடுக்கப்பட்ட ட்ரீம் கேர்ள்ஸ் திரைப்படம்.. பட்ஜெட் வெறும் ரூ.7 லட்சம் தான்.. ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

சினிமா உலகில் ஒரு படம் எடுக்க பல மாதங்கள், கோடிக்கணக்கான ரூபாய் செலவாகும் என்ற பிம்பத்தை ‘ட்ரீம் கேர்ள்’ திரைப்படம் உடைத்துள்ளது. எம்.ஆர். பாரதி இயக்கியுள்ள இந்த படம் வெறும் 20 நாட்களில் படமாக்கி முடிக்கப்பட்டுள்ளது. அதைவிட ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இந்தப் படத்தின் மொத்த பட்ஜெட் வெறும் 7 லட்சம் ரூபாய் மட்டுமே.

இப்படத்தில் ஜீவா மற்றும் ஹரிஷ்மிதா முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒரு சினிமாவில் இயக்குநராக வேண்டும் என்று துடிக்கும் நாயகனுக்கும், ஒரு சிறந்த பின்னணி பாடகியாக வேண்டும் என்ற லட்சியம் கொண்ட நாயகிக்கும் இடையிலான காதல்தான் படத்தின் கரு. “இந்த கதையில் வில்லனே கிடையாது; கதாநாயகனும் நாயகியும் தங்களது லட்சிய கனவுகளை துரத்துவதுதான் படத்தின் மையக்கதை” என்று இயக்குநர் பாரதி தெரிவித்துள்ளார்.

குறைந்த பட்ஜெட்டில், மிகக் குறுகிய காலத்தில் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி காதலர் தினத்தில் திரையரங்குகளில் வெளியாகிறது. “பெரிய பட்ஜெட் இல்லையென்றாலும், கனவுகளும் உழைப்பும் இருந்தால் தரமான படத்தை எடுக்க முடியும்” என்பதற்கு இந்த படம் ஒரு சிறந்த உதாரணமாக பார்க்கப்படுகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்