சினிமா

கல்யாணம் கட்டாயம் இல்லை!.. காலம் முழுக்க சிங்கிளாகவே இருக்கப்போகிறாரா சிம்பு?!

இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர், பாடகர் என பல அவதாரங்களை எடுத்து சகலகலா வல்லவன் டி ராஜேந்திரனின் மகன் சிலம்பரசன். ரசிகர்கள் இவரை STR என அழைக்கிறார்கள்.சிறு வயது முதலே சினிமாவில் நடித்து வருவதால் சிம்புவுக்கு சினிமாவில் நிறைய அனுபவம் உண்டு.. அறிவும் உண்டு.. அதேநேரம் பல காரணங்களால் இவர் சினிமாவில் தொடர்ந்து நடிப்பதில்லை. இரண்டு வருடங்களுக்கு ஒரு திரைப்படம்தான் இவரின் நடிப்பில் வெளியாகிறது.

தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் அரசன் திரைப்படத்தில் நடித்து வருகிறார் சிம்பு. இந்த படத்தை முடித்துவிட்டு டிராகன் படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். அது அவரின் 50-வது படமாகும். ஒருபக்கம் 43 வயது ஆகியும் சிம்பு இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை.

நடிகைகளில் நயன்தாரா, ஹன்சிகா இருவரையும் காதலித்தார். ஆனால் இரண்டு காதலுமே பிரேக்கப் ஆகிவிட்டது. அதன்பின் அவர் காதலில் சிக்கவில்லை. அவருக்கு அவரின் பெற்றோர் பெண் பார்த்து வருவதாகவும் செய்திகள் வெளியானது. ஆனால் எதுவும் உறுதி செய்யப்படவில்லை.

இந்நிலையில் ஊடகம் ஒன்றில் பேசிய நடிகர் சிம்பு ‘மொபைல் போன்கள் மனித உணர்வுகளை மாற்றி விட்டன.. காதலும், பிரிவும் இப்போது வேகமாக இருக்கிறது. ஆழமான உறவுகள் இப்போதும் இருக்கத்தான் செய்கின்றன.. திருமணம் கட்டாயம் இல்லை.. இருவரும் மனதளவில் தயாராக இருக்கும்போது மட்டுமே அது நடக்க வேண்டும்.. சமூகத்தை திருப்திப்படுத்துவதற்காக நான் ஒரு உறவில் இணைய மாட்டேன்’ என சொல்லியிருக்கிறார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்