சினிமா

வசூலா?!… வித் லவ் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்!

தற்போது பெரிய நடிகர்களின் படங்கள் பாக்ஸ் ஆபிஸில் தோல்வி அடையும் நிலையில் அறிமுக நடிகர்கள் நடிக்கும் படங்கள் நல்ல வசூலை பெற துவங்கியிருக்கிறது.. கடந்த வருடம் இறுதியில் சிறை படம் அப்படி வெளியாகி ஹிட் அடித்தது. தற்போது டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை இயக்கிய அபிஷன் ஜீவிந்த் கதாநாயகனாக நடித்திருக்கும் வித் லவ் ஒரு வெற்றி படமாக மாறியிருக்கிறது. இந்த படத்தில் மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.. அவரின் நடிப்பை பல இயக்குனர்களும் பாராட்டி வருகிறார்கள்.

இந்த படத்தை ஒரு ஃபீல் குட் திரைப்படமாக இயக்குனர் மதன் உருவாக்கியிருக்கிறார். திருமணம் செய்து கொள்வதற்காக சந்திக்கும் இருவர் ஒரு முடிவை எடுக்கிறார்கள்.. அந்த முடிவு என்ன என்பதை சுவாரஸ்யமான திரைக்கதையின் மூலம் சொல்லி இருக்கிறார் அறிமுக இயக்குனர் மதன். இது ரசிகர்களுக்கும் பிடித்திருக்கிறது.

கடந்த வெள்ளிக்கிழமை வெளியான வித் லவ் திரைப்படம் மூன்று நாட்களில் உலகமெங்கும் 11 கோடி வசூலுத்திருப்பதாக இந்த படத்தை தயாரித்த தயாரிப்பு நிறுவனமே அறிவித்திருக்கிறது.

இந்த படத்தை ரஜினியின் மகள் சௌந்தர்யா வேறு இரண்டு பேருடன் இணைந்து தயாரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்