டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா, 2023-ல் ஓய்வு பெற்ற பிறகு தனது உடல்நலம் மற்றும் சரும பராமரிப்பு ரகசியங்களை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். தற்போது தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் வழிகாட்டியாக பணியாற்றும் அவர், தனது உணவு முறையில் புரதச்சத்திற்கு முக்கியத்துவம் அளிக்கிறார். காலையில் இஞ்சி, மஞ்சள், தேன், எலுமிச்சை மற்றும் கருஞ்சீரகம் கலந்த ஆரோக்கிய பானத்துடன் தனது நாளை தொடங்குகிறார். பிறகு ஊறவைத்த சியா விதைகள் மற்றும் காபி குடித்துவிட்டு ஜிம்மிற்கு செல்கிறார்.
முன்பு இட்லி, தோசை என மாவுச்சத்து அதிகமுள்ள உணவுகளை உட்கொண்டவர், இப்போது உடற்பயிற்சி குறைந்திருப்பதால் முட்டையின் வெள்ளைக்கரு உள்ளிட்ட புரத உணவுகளையே அதிகம் எடுத்துக்கொள்கிறார்.
சருமப் பராமரிப்பை பொறுத்தவரை, காலையிலும் இரவிலும் தலா 10 நிலைகளை கொண்ட ‘கொரியன் ஸ்கின்கேர்’ முறையை பின்பற்றுகிறார். கடந்த ஓராண்டாக ‘ரெட் லைட் தெரபி’ மூலம் தனது சருமத்தையும் கூந்தலையும் பொலிவாக்கி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். முறையான உடற்பயிற்சி மற்றும் சன்ஸ்கிரீன் பயன்படுத்துவதை அவர் ஒருபோதும் மறப்பதில்லை.

