சினிமா

‘தாய்க்கிழவி’க்கும் கமலுக்கும் என்ன சம்பந்தம்? படத்தில் இப்படியொரு சம்பவமா?

ராதிகா நடிப்பில் வரும் 20ம் தேதி ரிலீசாக இருக்கும் திரைப்படம் தாய்கிழவி. சிவகார்த்திகேயன் தயாரிக்கும் இந்த படத்தை சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ளார். நிவாஸ் கே பிரசன்னா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தில் ராதிகாவுடன் இணைந்து முனிஸ்காந்த், சிங்கம்புலி என பல முக்கிய பிரபலங்களும் நடித்துள்ளனர். இந்த படத்தின் முதல் சிங்கள் சமீபத்தில் தான் வெளியானது.

இந்த பாடலை சிவகார்த்திகேயனே எழுதி பாடியிருக்கிறார். முதலில் இந்த படத்தில் நடிக்க ராதிகா தயங்கி இருக்கிறார். ஏனெனில் அதனுடைய கதாபாத்திரத்தின் தோற்றம். மிகவும் வயதான தோற்றத்தில் ராதிகா நடித்துள்ளார். முதலில் இந்த படத்தில் அதுவும் இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு தயங்கிய ராதிகாவை உற்சாகப்படுத்தி நடிக்க வைத்தவர் அவருடைய கணவர் சரத்குமார்.

ஏற்கனவே இந்தியன் படத்தில் சுகன்யா நடித்திருக்கும் கதாபாத்திரம் ராதிகாவிற்கு தான் வந்தது என்று சொல்லப்படுகிறது.வயதானத் தோற்றம் என்பதால் அந்த படத்தை மறுத்துவிட்டாராம் ராதிகா. இப்போது அதே மாதிரியான ஒரு தோற்றத்தில் தான் தாய் கிழவி திரைப்படத்திலும் நடித்துள்ளார். இதுவரை ராதிகா கேரியரில் நடித்திராத ஒரு கதாபாத்திரம் .

அதனால் இந்த படம் அவருடைய சினிமா கெரியரில் ஒரு மைல்கல்லாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மேக்கப்பிற்கு கிட்டத்தட்ட ஐந்து மணி நேரம் செலவாகுமாம். அதே நேரம் மேக்கப் கலைப்பதற்கு இரண்டு மணி நேரம் செலவாகுமாம். அதனால் இந்த படத்தில் மிகவும் டெடிகேட்டாக நடித்துள்ளார் ராதிகா. இந்த நிலையில் தாய்க்கிழவி படத்தில் கமல் ரசிகராக சிங்கம்புலி நடித்துள்ளாராம்.

கமல் சம்பந்தப்பட்ட சில வசனங்கள் அவருடைய ரசிகராக சிங்கம் புலி மிக அற்புதமாக நடித்துள்ளாராம். அவர் வரும் காட்சிகள் தியேட்டரில் அனல் பறக்கும் என்று படம் பார்த்தவர்கள் சொல்கிறார்கள். அதைப்போல படத்தின் கிளைமாக்ஸில் பெண்களுக்கு பயனுள்ள வகையில் சில விஷயங்கள் இருப்பதாகவும் அதை ராதிகா சொல்வதாகவும் அமைந்திருக்கிறது. அதனால் இந்த படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் அனைவரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்