சினிமா

சும்மா இருந்த சூர்யாவை சொறிஞ்சிவிட்ட ராதிகா!.. ஜோதிகாவை காதலிக்க இவர்தான் காரணம்!

திரையுலகில் சூர்யா-ஜோதிகா ஒரு நட்சத்திர ஜோடியாகவே திரையுலகில் பார்க்கப்படுகிறார்கள்.
திரையுலகில் பல நடிகர்கள், நடிகைகள் திருமணம் செய்து கொண்டாலும் அது பல ஆண்டுகள் நீடிக்கவில்லை. அதில் பல ஜோடிகள் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். ஆனால் சூர்யா – ஜோதிகா ஒரு சிறந்த தம்பதியாக திரையுலகில் வலம் வருகிறார்கள்.

சூர்யா சினிமாக்கு வந்த புதிதில் அவரின் படங்களில் தொடர்ந்து நடித்தவர் ஜோதிகா. அதனாலோ என்னவோ இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு சில வருடங்கள் காத்திருந்து சிவக்குமாரின் சம்மதம் பெற்று இருவரும் திருமணமும் செய்து கொண்டனர்.

இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் சூர்யாவின் அப்பா சிவக்குமார் ஒரு முக்கிய தகவலை சொல்லியிருக்கிறார். சூர்யா உயிரிலே கலந்தது படத்தில் நடித்த போது அந்த படத்தில் நடித்த ராதிகா தனியாக இருந்த சூர்யாவிடம் சென்று ‘ஏன் இப்படி தனியாக இருக்கிறாய்? ஜோதிகாவுடன் பேசு பேசு’ என சொல்லிக் கொண்டே இருந்தார். அதன் பின்னர்தான் சூர்யாவும் ஜோதிகாவுடன் பேச தொடங்கினார். எனவே அவரின் காதல் திருமணத்திற்கு ராதிகாதான் காரணம்’ என அவர் கூறியிருக்கிறார்.

மேலும் பல படங்களில் பல கதாநாயகிகளை காதலிப்பது போல நடித்திருக்கிறேன்.. நான் ஏன் என் மகன் காதலுக்கு தடை சொல்ல போகிறேன்?’ எனவும் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்