முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் மகேந்திர சிங் தோனி தொடர்ந்த அவதூறு வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமாருக்கு எதிராக தோனி இந்த மான நஷ்டஈடு வழக்கை தொடர்ந்திருந்தார். தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில், தோனிக்கு சூதாட்டத்தில் தொடர்பு இருப்பதாக சம்பத்குமார் பேசியிருந்ததே இந்த வழக்கிற்கு காரணமாகும்.
இந்த வழக்கின் ஒரு பகுதியாக, அந்த விவாத நிகழ்ச்சியின் சிடி பதிவை எழுத்து வடிவமாக மாற்றுவதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கான பணிகளை செய்வதற்கு ஆகும் கட்டணமாக ரூ. 10 லட்சத்தை சென்னை உயர் நீதிமன்றத்தில் செலுத்துமாறு தோனிக்கு நீதிபதிகள் தற்போது ஆணையிட்டுள்ளனர்.

