கனடா

கனடிய நிறுவனம் தங்க விலை அதிகரிப்பிற்கு தீர்வு காண முயற்சி!

தங்கம் உள்ளிட்ட மதிப்புமிக்க உலோகங்களின் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து வரும் நிலையில், கனடாவைச் சேர்ந்த ஒரு நகை நிறுவனம் தனது தயாரிப்பு முறையில் முக்கிய மாற்றங்களை மேற்கொள்ள முடிவு செய்துள்ளது.

டொராண்டோவைத் தலைமையிடமாகக் கொண்ட சுயிடேபேல்ஸ் “Suetables” நிறுவனம், தங்க விலை சாதனை உயரத்தை எட்டியதால் தங்களின் லாபம் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இதனால், பித்தளை (Brass), ஸ்டெர்லிங் சில்வர் (Sterling Silver) போன்ற மாற்று உலோகங்களை பயன்படுத்தி நகைகள் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது.

சந்தை மாற்றத்திற்கேற்ப நாம் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதற்காக வேறு உலோகங்களைப் பயன்படுத்தும் வழிகளை ஆராய்ந்து வருகிறோம்” என நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சூ ஹென்டர்சன் தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கிகள், குறிப்பாக சீனா மற்றும் வளர்ந்து வரும் சந்தை நாடுகள் அதிகளவில் தங்கம் கொள்வனவு செய்வதால் தங்க விலை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

தாம் 20 ஆண்டுகளாக நகை விற்பனையில் இருப்பதாகவும், இதுபோன்ற சூழ்நிலையை இதுவரை பார்த்ததில்லை எனவும் ஹென்டர்சன் தெரிவித்துள்ளார்.

தங்க விலை தினசரி மாறுபடுவதால், சில இணையதளங்களில் ‘விலை கணிப்புகள் மட்டுமே’ என குறிப்பிடப்படுகின்றன.

நேரடி விலைகளை காட்சிப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இது வணிகத்தை நடத்துவதற்கு கடினமாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நாங்கள் தரத்தில் சமரசம் செய்ய விரும்பவில்லை. உண்மையான தங்கமே பயன்படுத்துகிறோம். ஆனால் அதன் அளவை வாடிக்கையாளர் தீர்மானிக்கிறார்.

அதனால் விலையும் உயர வேண்டிய சூழல் உருவாகிறது என ஹென்டர்சன் தெரிவித்துள்ளார்.

தங்க விலையின் தொடர்ந்து உயர்வு, உலகளாவிய நகைத் துறையில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தும் என வணிக வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

கனடா

சுவீடன் மன்னர் கனடா விஜயம்

சுவீடன் மன்னர் கார்ல் XVI கஸ்டாஃப் மற்றும் மகாராணி சில்வியா நவம்பர் 18ஆம் திகதி கனடாவுக்கு விஜயம் செய்யஉ ள்ளனர். கனடா ஆளுநர் நாயகம் மேரி சைமன்
கனடா

கனடாவில் ஹாலோவின் இனிப்பு பையில் தங்க மோதிரம்

கனடாவின் வின்னிபிக் பகுதியில் ஹாலோவின் இனிப்பு பண்டங்கள் காணப்பட்ட பையொன்றில் தங்க மோதிரம் ஒன்று, பெண்ணுருவருக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. தனது மகளின் ஹாலோவின் இனிப்பு பண்ட பொதியில் இவ்வாறு