இந்தியா

கல்லூரியில் பி.காம் படிக்கும்போதே சம்பளம் ரூ.12 லட்சம்..!

ஃபரிதாபாத்தில் உள்ள பண்டிட் ஜவஹர்லால் நேரு கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாமில் 400-க்கும் மேற்பட்டோருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. இந்த முகாமில் ஐடி, மருத்துவம், ஆட்டோமொபைல் மற்றும் ஈ-காமர்ஸ் உள்ளிட்ட துறைகளை சார்ந்த 21 முன்னணி நிறுவனங்கள் பங்கேற்றன.

ஃபரிதாபாத், பல்வல் மற்றும் நூஹ் மாவட்டங்களை சேர்ந்த 16 அரசு கல்லூரிகளில் படிக்கும் சுமார் 1,500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இதில் கலந்துகொண்டு நேர்காணல்களில் பங்கேற்றனர்.
இந்த முகாமில் பண்டிட் ஜவஹர்லால் நேரு கல்லூரியை சேர்ந்த தன்மீத் சிங் என்ற பி.காம் மாணவர், துபாயைச் சேர்ந்த அயான் நிறுவனத்திடம் இருந்து ஆண்டுக்கு ரூ.12 லட்சம் என்ற மிக உயர்ந்த சம்பள பேக்கேஜை பெற்று சாதனை படைத்துள்ளார்.
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் மாணவர்களின் திறமைக்கேற்ப வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டன. தேர்வாகாத மாணவர்கள் தங்களது பலவீனங்களை கண்டறிந்து, திறன்களை மேம்படுத்தி அடுத்தடுத்த வாய்ப்புகளுக்குத் தயாராக வேண்டும் என கல்லூரி முதல்வர் டாக்டர் ருச்சிரா குல்லர் ஊக்கப்படுத்தினார்.
வேலைவாய்ப்புடன் மாணவர்களுக்கு ரெஸ்யூம் தயாரித்தல் மற்றும் ஆளுமை மேம்பாட்டுப் பயிற்சிகளும் இந்த நிகழ்வில் வழங்கப்பட்டன.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்