உலகம்

ரூ.1800 கோடிக்கு விற்பனையான பிரபல பாடகியின் இசைத்தொகுப்பு!

பாப் இசை உலகில் ‘பாப் இளவரசி’ என்று புகழப்படுபவர் பிரிட்னி ஸ்பியர்ஸ். இவர் தற்போது தனது ஒட்டுமொத்த இசைத்தொகுப்பின் உரிமைகளையும் Primary Wave என்ற நிறுவனத்திற்கு விற்பனை செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு சுமார் 200 மில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.1,800 கோடி என்று தெரியவந்துள்ளது.
இதன் மூலம், உலகப்புகழ் பெற்ற ‘Baby One More Time’, ‘Toxic’, ‘Womanizer’ போன்ற பல ஹிட் பாடல்களின் உரிமம் இனி அந்த நிறுவனத்திற்கே சொந்தமாகும்.
கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் இசைத்துறையில் இருந்து ஒதுங்கியிருக்கும் பிரிட்னி ஸ்பியர்ஸின் இந்த அதிரடி முடிவு, சர்வதேச இசை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம்

அமெரிக்காவின் முன்னாள் துணை ஜனாதிபதி டிக் செனி மறைவு

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியாக பதவி வகித்தவர் டிக் செனி.(84) இவர் அமெரிக்காவின் 46வது துணை ஜனாதிபதி ஆவார். குடியரசுக் கட்சியைச் சேர்ந்த இவர் 2001 முதல் 2009-ம்
உலகம்

செய்யாத குற்றத்திற்காக 43 ஆண்டுகள் சிறையில் இருந்த இந்திய வம்சாவளி நபரின் நாடுகடத்தல் நிறுத்திவைப்பு

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 64 வயதான சுப்பிரமணியம் வேதம், தனது நண்பரைக் கொலை செய்ததாக குற்றம்சட்டப்பட்ட வழக்கில் 1980 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை பெற்றார். எந்த