விளையாட்டு

இந்தியா – பாகிஸ்தான் நடைபெறுவதில் சிக்கல்?

2026 டி20 உலகக் கோப்பையில் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா – பாகிஸ்தான் மோதல் இன்று கொழும்பில் நடைபெற உள்ளது. ஆனால், கொழும்பு ஆர். பிரேமதாசா மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டிக்கு மழை மிகப்பெரிய முட்டுக்கட்டையாக இருக்கும் என அஞ்சப்படுகிறது.

வானிலை அறிக்கையின்படி, இன்று கொழும்பில் மழை பெய்ய 94 சதவீத வாய்ப்பு உள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக இலங்கையில் பலத்த மழை பெய்யக்கூடும் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

லீக் போட்டி என்பதால், இதற்கு ‘ரிசர்வ் டே’ கிடையாது. ஒருவேளை மழை காரணமாக ஆட்டம் முற்றிலும் கைவிடப்பட்டால், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்து அளிக்கப்படும்.

கொழும்பில் நிலவும் கணிக்க முடியாத வானிலையால் ஆட்டம் நடக்குமா என்ற கவலையில் ரசிகர்கள் உள்ளனர். டாஸ் போடும் சமயத்தில் மழை குறுக்கிட வாய்ப்புள்ளதால், மைதான ஊழியர்கள் தயார் நிலையில் உள்ளனர். இந்த முக்கிய ஆட்டத்தில் புள்ளி பகிர்வு என்பது இரு அணிகளின் அரையிறுதி வாய்ப்பை பாதிக்கும் என கூறப்படுகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

விளையாட்டு

பெர்த் டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் ஏற்பட்ட மாற்றம் என்ன?

இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடைபெற்றது. இதில்
விளையாட்டு

பேட்டிங் வரிசையில் ஏற்றம் இறக்கம்: சுந்தர் அளித்த பதில்..!

இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் தொடரில் இந்தியா தடுமாறி வருகிறது. முதல் போட்டியில் தோல்வியடைந்த நிலையில், 2-வது போட்டியில் மோசமான நிலையில் உள்ளது. முதல் போட்டியில் யாரும்