நடிகர் விஜய் அரசியலுக்கு சென்றுவிட்ட நிலையில் அவர் கடைசியாக நடித்திருக்கும் திரைப்படம் ஜனநாயகன். இந்த படத்தை பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டு ஜனவரி 9ம் தேதி என ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது. விஜய் ரசிகர்களும் இந்த படத்தை பார்க்க மிகவும் ஆவலுடன் இருந்தார்கள். இந்தியா மட்டுமில்லாமல் வெளிநாடுகளிலும் இந்த படத்தை பார்க்க ரசிகர்கள் பலரும் முன்பதிவு செய்தனர்.
ஆனால் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் படம் வெளியாகவில்லை. இது விஜய் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது. தணிக்கை அதிகாரி ஒருவர் சொன்ன புகாரின் காரணமாக படத்தை மறுத்தணிக்கு செய்ய வேண்டும்.. எனவே இன்னும் மேலும் கால தாமதமாகும் என தணிக்கை வாரியம் சொன்னதால் தயாரிப்பாளர் தரப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது..
தற்போது ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் படத்திற்கு நீதிமன்றத்தில் தீர்வு எட்டப்படவில்லை. எனவே சமீபத்தில் தயாரிப்பாளர் வழக்கை வாபஸ் பெற்றார். மேலும் மறுதணிக்கைக்கும் விண்ணப்பத்திருக்கிறார்கள். அதேநேரம் அதிகாரிகள் எப்போது படத்தை மீண்டும் பார்ப்பார்கள் எப்போது படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்கும் என்பது தெரியவில்லை.
இந்த மாதத்திற்குள் ஜனநாயகம் படன் வெளியாகவில்லையென்றால் தேர்தலுக்கு பின்னரே படம் வெளியாகும் என பலரும் சொல்கிறார்கள். இந்நிலையில், இந்த படத்தை கனடா நாட்டில் வெளியிடும் வினியோக உரிமையை வாங்கியிருக்கும் விநியோகஸ்தர் York Cinemas என்கிற நிறுவனம் ஏப்ரல் 30ம் தேதி வரை ஜனநாயகன் படம் வெளியாகாது. இந்த படத்திற்காக அட்வான்ஸ் புக்கிங் செய்த ரசிகர்கள் படத்தை திரும்ப பெற்றுக் கொள்ளுங்கள் என அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

