இந்தியா

பாஜக எம்.எல்.ஏவுக்கு ஜாமின் மறுத்த உச்சநீதிமன்றம்

கர்நாடக பாஜக எம்.எல்.ஏ பைரதி பசவராஜ், ரியல் எஸ்டேட் அதிபர் ‘பிக்லு’ சிவா கொலை வழக்கில் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. “ஒரு மக்கள் பிரதிநிதியாக விசாரணையை எதிர்கொள்ளும் தைரியம் இருக்க வேண்டும்” என்று தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு தெரிவித்தது. மேலும், அவர் சரணடைந்து வழக்கமான ஜாமீன் கோருமாறும் அறிவுறுத்தியது.

பெங்களூருவில் பிக்லு சிவா சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், பசவராஜ் ஐந்தாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். ஏற்கனவே கர்நாடக உயர் நீதிமன்றம் முன்ஜாமீன் மறுத்ததை தொடர்ந்து, அவர் தலைமறைவாக இருந்ததாக கூறப்படுகிறது.

தற்போது உச்ச நீதிமன்றத்தின் இந்த அதிரடி உத்தரவால், குஜராத்திலிருந்து பெங்களூரு திரும்பும் அவரை விமான நிலையத்திலேயே கைது செய்ய சிஐடி அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளனர்.

சொத்துத் தகராறு காரணமாக நடைபெற்ற இந்த சதித் திட்டத்தில் எம்.எல்.ஏ-வுக்கு தொடர்பிருப்பதாக கூறப்படும் ஆதாரங்களை சிஐடி திரட்டியுள்ளது. இந்த விவகாரம் கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்