கனடா

போலித் தகவல்களை கண்டறிய முடியும்: கனடிய ஆய்வாளரின் கண்டுபிடிப்பு!

கனடாவை பிளவுபடுத்தவும், உண்மை நிலைகளை மாறுபடுத்தவும் நோக்கமுள்ள ஆன்லைன் தவறான தகவல் பரப்புதல்களுக்கு எதிராக செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் முக்கிய ஆயுதமாக மாறியுள்ளது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தவறான தகவல் கண்டறிதல் கருவியான CIPHER-இல் AI தொழில்நுட்பத்தை ஒருங்கிணைத்ததன் மூலம், தொடர்ந்து பரவி வரும் பொய்யான மற்றும் வழிதவறச் செய்யும் தகவல்களை விரைவாக அடையாளம் காண முடிகிறது என தெரிவிக்கப்படுகின்றது.

கனடிய மேம்பட்ட ஆய்வ நிறுவகத்தினால் இது குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

தற்போதைக்கு இந்த கருவி ரஷ்ய பிரசாரங்களை மட்டுமே பகுப்பாய்வு செய்கிறது என இந்த திட்டத்தை வழிநடத்தும் ரெஜினா பல்லைக்கழகத்தின் இணை பேராசிரியர் பிரையன் மெக்க்வின் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், எதிர்காலத்தில் சீன மொழிகளில் வெளிவரும் பிரசாரங்களையும் கண்காணிக்கும் வகையில் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். கனடாவை அதிகம் குறிவைத்த முக்கிய அச்சுறுத்தல் ரஷ்யாவாக இருந்தது.

ஆனால் இப்போது நாம் திசைமாற்றம் செய்யத் தொடங்கியுள்ளோம் என அவர் குறிப்பிட்டார்.

CIPHER கருவி வெளிநாட்டு ஊடக தளங்களில் வெளிவரும் சந்தேகத்திற்கிடமான தகவல்களை ஸ்கேன் செய்து, பின்னர் மனித உண்மைச் சரிபார்ப்பாளர்களால் அவற்றை மதிப்பீடு செய்கிறது.

அண்மையில், ரஷ்ய ஊடகம் ஒன்றில் அல்பெர்டா மாகாணம் கனடாவிலிருந்து பிரிய முயற்சி செய்கிறது என்ற செய்தி வெளியானதை இந்த அமைப்பு கண்டறிந்ததாக மெக்க்வின் தெரிவித்தார்.

அல்பர்ட்டா மாகாணத்தில் சில பிரிவினை ஆதரவு நிகழ்வுகள் நடைபெற்றிருந்தாலும், அதிகாரப்பூர்வ பிரிவு செயல்முறை எதுவும் தற்போது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

திறமையான தவறான தகவல்களில் சிறு உண்மைத் துளிகள் கலந்து இருக்கும் என்று அவர் விளக்கினார்.

தவறான தகவல் பிரசாரங்களின் முக்கிய நோக்கம் சமூகங்களை பிளவுபடுத்தி வன்முறையை தூண்டுவதாகும் என மெக்க்வின் கூறியுள்ளார்.

சாதாரண மக்கள் இத்தகவல்களை நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிரும்போது அவை அதிக தாக்கம் ஏற்படுத்துவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

கனடா

சுவீடன் மன்னர் கனடா விஜயம்

சுவீடன் மன்னர் கார்ல் XVI கஸ்டாஃப் மற்றும் மகாராணி சில்வியா நவம்பர் 18ஆம் திகதி கனடாவுக்கு விஜயம் செய்யஉ ள்ளனர். கனடா ஆளுநர் நாயகம் மேரி சைமன்
கனடா

கனடாவில் ஹாலோவின் இனிப்பு பையில் தங்க மோதிரம்

கனடாவின் வின்னிபிக் பகுதியில் ஹாலோவின் இனிப்பு பண்டங்கள் காணப்பட்ட பையொன்றில் தங்க மோதிரம் ஒன்று, பெண்ணுருவருக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. தனது மகளின் ஹாலோவின் இனிப்பு பண்ட பொதியில் இவ்வாறு