பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், சுமார் 32 மாத சிறைவாசத்திற்கு பிறகு முதன்முறையாக மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு மாற்றப்பட உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
இம்ரான்கான் கண்கள் தொடர்பான தீவிர சிகிச்சைக்காக இந்த முடிவை ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு எடுத்துள்ளது. இம்ரான் கானின் உடல்நிலை குறித்து எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் தொடர் போராட்டங்களை நடத்தி வந்த நிலையில், அமைச்சர் தாரிக் ஃபசல் சவுத்ரி இந்த முக்கிய அறிவிப்பை சனிக்கிழமை வெளியிட்டார்.
சிறைத்துறையினரின் கூற்றுப்படி, இம்ரான் கானுக்கு இதுவரையிலான வழக்குகளில் சட்டப்பூர்வ நிவாரணம் ஏதும் கிடைக்கவில்லை. இருப்பினும், அவரது கண்பார்வையில் 85 சதவீதம் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், சிறப்பு மருத்துவ வசதிகள் கொண்ட மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்படுகிறார்.

