செல்வராகவன் இயக்கத்தில் பல படங்கள் வந்தாலும் குறிப்பிட்ட படங்களுக்கு மட்டும் இப்போதுவரை ஒரு மவுசு இருந்து கொண்டே வருகிறது. அதில் புதுப்பேட்டை , ஆயிரத்தில் ஒருவன், காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி போன்ற படங்களை சொல்லலாம். ஆயிரத்தில் ஒருவன் படத்தை பொறுத்தவரைக்கும் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம். அன்றைய காலகட்டத்தில் அவ்ளோ பட்ஜெட்டில் யாரும் படங்களை எடுத்ததில்லை.
மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்ட படமாக அது இருந்தது. ஆனால் படத்தை யாரும் கொண்டாடவில்லை. அதற்கு மாறாக இப்போது ஆயிரத்தில் ஒருவன் 2 படம் எப்போது என கேட்டு வருகின்றனர். ஆயிரத்தில் ஒருவன் படத்தை இப்போது கொண்டாடி வருகின்றனர். ஆனால் ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தை பொறுத்தவரைக்கும் நான் ஒருவன் மட்டும் சார்த்ததில்லை.
கூட்டாக சில பேர் இருக்கிறார்கள். அவர்களும் மனசு வைக்கவேண்டும். கேப்டன் தயாராகத்தான் இருக்கிறார். ஆனால் முழுவதுமாக அவர் ஒருவரால் மட்டும் கப்பலை ஓட்ட முடியுமா? ஆரம்பத்தில் உபகரணங்கள், பணம் மற்றும் மனிதவளத்திற்கு நிறைய செலவு செய்ய வேண்டிய கட்டாயம் இருந்தது. அதனால் அந்த கஷ்டம் இல்லாமல் அந்தப் படத்தில் தெரியாமல் இறங்கிவிட்டேன்.
ஆனால் இப்போது தகவல் தொழில் நுட்பத்தின் வளர்ச்சி இன்னும் அந்த வேலை எளிதாக முடியும். அதனால் பொறுத்திருந்து பார்ப்போம். ஆனால் புதுப்பேட்டை 2 படத்தின் கதை முடியும் தருவாயில் இருக்கிறது என்று செல்வராகவன் கூறியிருக்கிறார்.

