உலகம்

சர்வதேச அளவில் யூடியூப் சேவையில் இடையூறு: பயனர்கள் அவதி

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்படும் யூடியூப் தளம், இன்று திடீரென செயலிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதல் யூடியூப் பக்கத்தை பயன்படுத்த முயன்ற பயனர்களுக்கு, அதன் முகப்புப் பக்கத்தில் “Something went wrong” என்ற செய்தி திரையில் தோன்றியது. இதனால் வீடியோக்களை பார்க்க முடியாமல் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கன்டென்ட் கிரியேட்டர்கள் கடும் குழப்பத்திற்கும் அவதிக்கும் உள்ளாகினர்.

இந்த தொழில்நுட்ப கோளாறு குறித்து சமூக வலைதளங்களில் புகார்கள் குவிந்தன. இதனை தொடர்ந்து, கூகுள் நிறுவனத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் உடனடியாக ஆய்வில் இறங்கினர். சர்வர் கோளாறு காரணமாக இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

சில மணி நேர போராட்டத்திற்குப் பிறகு, கோளாறுகள் சரிசெய்யப்பட்டு யூடியூப் தளம் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியது. தற்போது தளம் தடையின்றி செயல்படுவதாக கூகுள் தரப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம்

அமெரிக்காவின் முன்னாள் துணை ஜனாதிபதி டிக் செனி மறைவு

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியாக பதவி வகித்தவர் டிக் செனி.(84) இவர் அமெரிக்காவின் 46வது துணை ஜனாதிபதி ஆவார். குடியரசுக் கட்சியைச் சேர்ந்த இவர் 2001 முதல் 2009-ம்
உலகம்

செய்யாத குற்றத்திற்காக 43 ஆண்டுகள் சிறையில் இருந்த இந்திய வம்சாவளி நபரின் நாடுகடத்தல் நிறுத்திவைப்பு

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 64 வயதான சுப்பிரமணியம் வேதம், தனது நண்பரைக் கொலை செய்ததாக குற்றம்சட்டப்பட்ட வழக்கில் 1980 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை பெற்றார். எந்த