இந்தியா

திமுக ஆட்சிக்கு வருவது உறுதி!. ஆனா இத பண்ணுங்க!.. சட்டசபையில் பேசிய செல்வபெருந்தகை!

2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பணிகளில் வேகம் காட்டி வருகின்றன. குறிப்பாக கூட்டணி அமைப்பது, தொகுதி பங்கீடு பேசுவது போன்ற வேலைகளில் இறங்கியிருக்கின்றன . திமுகவை பொறுத்தவரை வழக்கம்போல் தங்களது கூட்டணி கட்சிகளுடன் இந்த முறையும் தேர்தலை சந்திக்கவிருக்கிறது. அதேநேரம் இந்த முறை ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்பது உள்ளிட்ட சில கோரிக்கைகளை காங்கிரஸ் வைத்துள்ளது.

ஆனால் அதை ஏற்க திமுக தலைமை தயாராக இல்லை.. ஆனாலும் காங்கிரஸ் இந்த கருத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆட்சியில் பங்கில்லை என்றால் 6 அமைச்சர் பதவியை காங்கிரஸ் கேட்பதாக தெரிகிறது. வருகிற 22ம் தேதிதான் திமுக கூட்டனி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பற்றிய பேச்சுவார்த்தையை துவங்கவிருக்கிறது.

இந்நிலையில், இன்று சட்டசபையில் பேசிய காங்கிரஸ் எம்எல்ஏ மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்லபெருந்தகை ‘தொழிற்சாலை அதிகம் உள்ள திருப்பெரும்புதூர் தொகுதியில் பல சாலைகள் பழுதடைந்துள்ளது. 2வது முறை நீங்கள்தான் மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டாலும், தேர்தலுக்கு முன்பாக பழுதடைந்த சாலைகலை பழுது பார்த்து கொடுங்கள்’ என கோரிக்கை வைத்திருக்கிறார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்