உலகம்

வரலாறு காணாத வகையில் உயர்ந்த வெள்ளரிக்காய் விலை.. ஒரு கிலோ ரூ.356..

உக்ரைன் போரினால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால், ரஷ்யாவில் வெள்ளரிக்காயின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது.

டிசம்பர் மாதத்திலிருந்து இதன் விலை இருமடங்காக அதிகரித்து, ஒரு கிலோ 300 ரூபிள் அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.356 முதல் விற்கப்படுகிறது. சில இடங்களில் இறைச்சி மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட பழங்களை விட வெள்ளரிக்காய் விலை அதிகமாக இருப்பதால், ரஷ்ய மக்கள் இதனை “ஆடம்பர உணவு” என்று சமூக வலைதளங்களில் கிண்டல் செய்து வருகின்றனர்.

இந்த விலையேற்றத்திற்கு போர்ச் சூழலால் ஏற்பட்ட பணவீக்கம், தொழிலாளர் தட்டுப்பாடு மற்றும் ஜனவரி 1 முதல் அமலுக்கு வந்த வரி உயர்வுஆகியவை முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன.

சைபீரியா போன்ற பகுதிகளில் ஒரு நபர் இவ்வளவுதான் வாங்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நிலைமை மோசமானதால், சில செய்தித்தாள்கள் தங்கள் வாசகர்களுக்கு வெள்ளரிக்காய் விதைகளை இலவசமாக வழங்கி, வீடுகளிலேயே வளர்க்க அறிவுறுத்தி வருகின்றன.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம்

அமெரிக்காவின் முன்னாள் துணை ஜனாதிபதி டிக் செனி மறைவு

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியாக பதவி வகித்தவர் டிக் செனி.(84) இவர் அமெரிக்காவின் 46வது துணை ஜனாதிபதி ஆவார். குடியரசுக் கட்சியைச் சேர்ந்த இவர் 2001 முதல் 2009-ம்
உலகம்

செய்யாத குற்றத்திற்காக 43 ஆண்டுகள் சிறையில் இருந்த இந்திய வம்சாவளி நபரின் நாடுகடத்தல் நிறுத்திவைப்பு

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 64 வயதான சுப்பிரமணியம் வேதம், தனது நண்பரைக் கொலை செய்ததாக குற்றம்சட்டப்பட்ட வழக்கில் 1980 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை பெற்றார். எந்த