கனடா நாட்டின் விரைவு நுழைவுத் திட்டத்தில் 2026-ஆம் ஆண்டிற்கான புதிய வேலைவாய்ப்புப் பிரிவுகளை அந்நாட்டு குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. நாட்டின் பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் இந்த மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. புதிய பட்டியலின்படி, கனடாவில் பணி அனுபவம் கொண்ட ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மூத்த மேலாளர்கள், விமான ஓட்டிகள் மற்றும் விமானப் பராமரிப்பு வல்லுநர்கள் உள்ளிட்ட போக்குவரத்துத் துறையினர் ஆகியோர் விண்ணப்பிக்கலாம்.
மேலும், கனடா ஆயுதப்படைகளில் முக்கியப் பொறுப்புகளில் பணியமர்த்தப்படும் வெளிநாட்டு ராணுவ மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கும் இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது தவிர, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட மருத்துவ மருத்துவர்களுக்கான பிரிவில் விரைவில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தச்சர்கள், பிளம்பர்கள் மற்றும் சுகாதாரத் துறையைச் சார்ந்தவர்களுக்கு 2025-ல் அறிமுகப்படுத்தப்பட்ட முன்னுரிமைகள் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

