அதிமுக ஆட்சியில் மூன்று முறை முதல்வராக இருந்தவர் ஓ.பன்னீர் செல்வம். கடந்த 2022 ஆம் வருடம் பழனிச்சாமியால் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார். அதன்பின், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு என்ற இயக்கத்தை தொடங்கி அதிமுகவை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் அது நடக்கவில்லை.
அவர் அணியில் இருந்த எல்லோரும் ஒவ்வொருவராக ஒவ்வொரு கட்சிக்கு சென்று விட்டார்கள். தற்போது ஓபிஎஸ் தனித்துவிடப்பட்டிருக்கிறார். இந்நிலையில்தான், நேற்று சட்டசபையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலினை சந்தித்து பேசினார் ஓபிஎஸ். இதுபற்றி செய்தியாளிடம் பேசிய ஓபிஎஸ் ‘இந்த முறையும் திமுகவே ஆட்சி அமைக்கும்.. 5 ஆண்டுகளில் பல சாதனைகளை செய்திருக்கிறார்கள்’ என ஓப்பனாக பேட்டி கொடுத்தார்.
திடீரென ஓ.பன்னீர்செல்வம் ஏன் திமுகவை ஆதரிக்கிறார் என்கிற கேள்வி பலருக்கும் எழுந்திருக்கும் நிலையில் அதன் பின்னணி தற்போது தெரிய வந்திருக்கிறது..அதிமுகவில் இணையும் முயற்சியை எடப்பாடி பழனிச்சாமி முறியடித்து விட்டார்.. சரி அதிமுக, பாஜக இருக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய முயற்சி செய்தால் அதுவும் நடக்கவில்லை.
எனவேதான் எடப்பாடி பழனிச்சாமிகு எதிராக அரசியல் செய்ய முடிவு செய்திருக்கிறாராம் பன்னீர்செல்வம். அதனால்தான் திமுகவுக்கு ஆதரவாக பேசியிருக்கிறார். இந்த முறை திமுக வேட்பாளராக தனது தனது மகன் ஜெய் பிரதீப்புக்கு தேனி மாவட்டத்தில் ஒரு தொகுதியை கேட்க திட்டமிட்டிருக்கிறாராம் பன்னீர்செல்வம். அதேநேரம் 2026 தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடப் போவதில்லை எனவும் சொல்கிறார்கள்.

