சினிமா

ரெட்ரோ ஸ்வாக்! கமல் ரஜினி இணையும் படத்தின் ப்ரோமோ.. இதை கவனிச்சீங்களா?

நெல்சன் இயக்கத்தில் தற்போது ரஜினி ஜெயிலர் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே அந்த படத்தின் முதல் பாகம் பெரிய அளவில் ஹிட் அடித்த நிலையில் இரண்டாம் பாகமும் மக்கள் மத்தியில் பெரிய அளவில் எதிர்பார்ப்புடன் இருக்கிறது.

இந்த படமும் மாபெரும் வெற்றி அடைந்தால் கோலிவுட்டில் கொண்டாடப்படும் இயக்குனராக நெல்சன் மாறிவிடுவார். அதற்கு ஏற்ப ஜெயிலர் 2 திரைப்படத்திற்கு பிறகு அடுத்து நெல்சன் ரஜினியையும் கமலையும் வைத்து ஒரு படத்தை இயக்க இருக்கிறார். அந்த படத்தின் அப்டேட் பற்றிதான் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வந்து கொண்டே இருக்கின்றன.

நேற்று அந்த படத்தின் ப்ரோமோ வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில் நாளை சரியாக 12:07 மணியளவில் அந்தப் படத்தின் ப்ரோமோ வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு ஏற்ப ஒரு போஸ்டரும் வெளியாகி இருக்கிறது. அந்த போஸ்டரில் இரு கைகள் மட்டும் காட்டப்பட்டிருக்கிறது.

ஒரு கையில் கடிகாரமும் இன்னொரு கையில் மோதிரமும் இருக்கிறது. இரு கைகளுக்கு நடுவில் ஒரு கேப்ஷன் இருக்கிறது. அதில் Some men set rules..some men just rule என இருக்கிறது. இந்த போஸ்டரை குறிப்பிட்டு இந்த படம் எப்படியான ஒரு படமாக இருக்கும் என நெட்டிசன்கள் தங்களுடைய கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.

போஸ்டர் மற்றும் அதில் உள்ள கேப்சனை எல்லாம் பார்க்கும் பொழுது இது கண்டிப்பாக 80, 90 காலகட்டத்தில் இருக்கும் மாதிரியான திரைப்படமாகத்தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில் உள்ள கேப்சனை பார்க்கும் பொழுது ஒருவர் ரூல்ஸை உருவாக்குபவராகவும் இன்னொருவர் அந்த ரூலாகவே இருப்பவராகவும் இந்த படத்தில் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக மொத்தம் நெல்சன் ஒரு பெரிய சம்பவம் பண்ண போகிறார் என்பது இந்த போஸ்டரில் இருந்து தெரிகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்