சினிமா

யாரு யாருக்கோ கொடுக்குறாங்க.. ராதிகாவுக்கு தேசிய விருது கிடைக்காதது பற்றி சரத் காட்டம்

இந்திய சினிமாவில் ஒரு ஆகச் சிறந்த நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை ராதிகா. கிழக்கே போகும் ரயில் திரைப்படத்தில் தொடங்கி தற்போது ரிலீசுக்கு காத்துக் கொண்டிருக்கும் தாய்க்கிழவி திரைப்படம் வரைக்கும் அவர் ஏற்று நடிக்காத கதாபாத்திரங்கள் இல்லை. ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரம் .எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை அசால்ட்டாக நடித்துவிட்டு செல்பவர் ராதிகா.

அவருடைய பாடி மாடுலேஷன், நடிப்பு என சாவித்திரிக்கு பிறகு நடிப்பிற்கு ஒரு உதாரணமாக ராதிகாவை சொல்லலாம். அவருடைய தைரியம் மற்ற பெண்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருந்து வருகிறார் ராதிகா. வரும் 27ஆம் தேதி அவருடைய நடிப்பில் தாய்க்கிழவி திரைப்படம் திரைக்கு வரவிருக்கிறது. அதோடு சரத்குமார் நடிக்கும் ஒரு படமும் வெளியாக இருக்கிறது. இதைப் பற்றி சரத்குமார் ஒரு பேட்டியில் முதலில் தாய்க்கிழவி படம் இருபதாம் தேதி வருவதாக இருந்தது.

என்னுடைய படத்தையும் இருபதாம் தேதி தான் மாற்றினார்கள். ஆனால் இந்த மாதிரி ராதிகா படமும் 20ஆம் தேதி வருகிறது. அதனால் கொஞ்சம் மாற்றி வைக்கலாம் என கூறிய பிறகுதான் என்னுடைய படம் 27ஆம் தேதி வருகிறது. ஆனால் இப்போது தாய்க்கிழவி திரைப்படமும் அதே 27ஆம் தேதி தான் வருகிறது. போட்டி அப்படின்னு இறங்கியாச்சு. ஆனால் இதை வெளியில் ராதிகாவும் சரத்குமாரும் மோத இருக்கிறார்கள் என்றெல்லாம் செய்திகள் வெளியாகும்.

ஆனால் இது வேறு மாதிரியான போட்டி. தாய்க்கிழவி திரைப்படத்தை நானும் கமல் சாரும் பார்த்தோம். அவ்வளவு அற்புதமாக நடித்திருக்கிறார். படம் கண்டிப்பாக ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றெல்லாம் கூறிய சரத்குமார் ராதிகாவுக்கு தேசிய விருது இதுவரை கிடைக்கவில்லை. அதற்கான காரணம் என்ன என்பதும் எனக்கு தெரியவில்லை. யார் யாருக்கோ தேசிய விருது கொடுக்கிறார்கள். ஆனால் ராதிகாவுக்கு இன்னும் கிடைக்கல. எம் ஆர் ராதாவின் பெருமையை இன்று வரை ராதிகாவும் ராதா ரவியும் காப்பாற்றி வருகிறார்கள் என தன்னுடைய ஆதங்கத்தையும் சேர்த்து வெளிப்படுத்தினார் சரத்குமார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்