உலகம்

இறந்த பின்னும் சமூக வலைதளங்களில் உலவலாம்: மெட்டாவின் ஏஐ ‘மறுபிறவி’ திட்டம்!

மெட்டா நிறுவனம் ‘டிஜிட்டல் மறுபிறவி’ எனப்படும் ஒரு வினோதமான தொழில்நுட்பத்திற்கு காப்புரிமை பெற்றுள்ளது. இதன் மூலம், ஒரு பயனர் சமூக வலைதளங்களில் இருந்து நீண்ட இடைவெளி எடுக்கும்போதோ அல்லது அவர் இறந்துவிட்டாலோ, அவருக்குப் பதிலாக ஒரு AI அந்தத் கணக்கை நிர்வகிக்கும்.

பயனரின் முந்தைய உரையாடல்கள், புகைப்படங்கள் மற்றும் பதிவுகளை ஆராய்ந்து, அவர் உயிரோடு இருந்தால் எப்படி செயல்படுவாரோ, அதே பாணியில் இந்த ஏஐ பதிலளிக்கும் மற்றும் பதிவுகளை இடும்.
இருப்பினும், இந்த தொழில்நுட்பத்தை இப்போதைக்கு பயன்பாட்டிற்கு கொண்டு வரும் எண்ணம் இல்லை என மெட்டா தெரிவித்துள்ளது. இந்த திட்டம் ஒருபுறம் வியப்பை ஏற்படுத்தினாலும், தரவு திருட்டு மற்றும் நெறிமுறைகள் சார்ந்த விவாதங்களையும் கிளப்பியுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம்

அமெரிக்காவின் முன்னாள் துணை ஜனாதிபதி டிக் செனி மறைவு

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியாக பதவி வகித்தவர் டிக் செனி.(84) இவர் அமெரிக்காவின் 46வது துணை ஜனாதிபதி ஆவார். குடியரசுக் கட்சியைச் சேர்ந்த இவர் 2001 முதல் 2009-ம்
உலகம்

செய்யாத குற்றத்திற்காக 43 ஆண்டுகள் சிறையில் இருந்த இந்திய வம்சாவளி நபரின் நாடுகடத்தல் நிறுத்திவைப்பு

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 64 வயதான சுப்பிரமணியம் வேதம், தனது நண்பரைக் கொலை செய்ததாக குற்றம்சட்டப்பட்ட வழக்கில் 1980 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை பெற்றார். எந்த