சினிமா

எனக்கும் கங்கனாவுக்கும் என்ன பிரச்சனை.. நடிகை டாப்ஸி..!

பாலிவுட் நடிகை டாப்ஸி மற்றும் கங்கனா ரணாவத் இடையே நீண்ட காலமாக மோதல் நிலவி வருவதாக கூறப்படும் நிலையில், அது குறித்து டாப்ஸி தற்போது விளக்கமளித்துள்ளார்.

சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய டாப்ஸி ’கங்கனாவுடன் தனக்கு எந்தவிதமான நேரடி சண்டையும் இல்லை என்று திட்டவட்டமாக கூறினார். தாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் எங்கும் தவறாக பேசவில்லை என்றும், மக்கள் அப்படி நினைப்பதில் அவர்களுக்கு மகிழ்ச்சி என்றால் அப்படியே நினைத்து கொள்ளட்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
உண்மையில் கங்கனாவின் சகோதரி ரங்கோலி சாண்டல் தான் தன்னை சீண்டியதாக தெரிவித்த டாப்ஸி , சில ஆண்டுகளுக்கு முன் ரங்கோலி தன்னை ‘மலிவான நகல்’ என்று விமர்சித்ததை சுட்டிக்காட்டினார். டாப்ஸி நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘ஆசிஸ்’ திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், அவரின் இந்த வெளிப்படையான விளக்கம் திரைத்துறையில் கவனத்தைப் பெற்றுள்ளது.
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தனது நிலைப்பாட்டை அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்