இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்ல கண்ணு. இவருக்கு வயது 101. ஆனாலும் அரசியலில் ஆக்டிவாக செயல்பட்டு வந்தார். அவ்வப்போது பல அரசியல் தலைவர் அவரை நேரில் சென்று சந்திப்பது வழக்கம்.. அது தொடர்பான புகைப்படங்களும் சமூகவலைத்தளங்களில் வெளியாகும். தமிழகத்தில் தூய்மையான அரசியல்வாதி என இவரை சொல்வார்கள். அதனாலோ என்னவோ அரசியலில் இவருக்கு நல்ல இடம் கிடைக்கவில்லை.
கடந்த சில வருடங்களாகவே வயது மூப்பு காரணமாக தனது வீட்டில் ஓய்வெடுத்து வந்தார். இந்நிலையில்தான், கடந்த ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி வீட்டில் தவறி விழுந்ததில் காயமடைந்தார்.
அதையடுத்து சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.. அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வீடு திரும்பினார்.
அதன்பின் கடந்த டிசம்பர் 25ம் தேதி மீண்டும் அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. சில நாட்கள் சிகிச்சையில் இருந்த நல்ல கண்னு ஜனவரி 8ம் தேதி வீடு திரும்பினார். அதன்பின் மீண்டும் கடந்த 1ம் தேதி அவருக்கு மூச்சு திணறல் ஏற்படவே சென்னை ஸ்டாலின் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த 20 நாட்களுக்கு அங்கு அவர் சிகிச்சை பெற்று வரும் இந்நிலையில், தற்போது மூச்சு திணறல் காரணமாக அவரது உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக தற்போது செய்திகள் கசிந்திருக்கிறது.

