முன்னாள் இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் ஷிகர் தவான், தனது ஐரீஷ் காதலி சோஃபியா ஷைனை மறுமணம் செய்துகொண்டார். நேற்று நடைபெற்ற இந்த திருமண விழாவில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
சோஃபியா ஒரு ஐரிஷ் தயாரிப்பு நிறுவனத்தில் ஆலோசகராக பணியாற்றி வருகிறார்; இவர்கள் இருவரும் துபாயில் சந்தித்ததாக கூறப்படுகிறது. 2025 மே மாதம் தனது காதலை பகிரங்கப்படுத்திய தவான், 2026 ஜனவரியில் நிச்சயதார்த்தம் செய்துகொண்டார்.
தவான் தனது முதல் மனைவி ஆஷா முகர்ஜியை 2023 அக்டோபரில் அதிகாரப்பூர்வமாக விவாகரத்து செய்தார். முதல் திருமண முறிவுக்கு பிறகு தனது மகனை பார்க்க முடியாமல் தவிப்பதாக அவர் பதிவிட்டிருந்தது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது.
தற்போது தனது 40 வயதில் புதிய வாழ்க்கையை தொடங்கியுள்ள தவானுக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. இடது கை பேட்டராக இந்திய அணிக்கு பல வெற்றிகளைத் தேடித்தந்த தவானின் இந்தத் திருமண செய்தி கிரிக்கெட் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.

