திரைத்துறையின் நட்சத்திர ஜோடிகளான விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் திருமண கொண்டாட்டங்கள் இன்று உதய்பூரில் கோலாகலமாக தொடங்கின.
பிப்ரவரி 26 அன்று ஆரவல்லி மலைத்தொடரில் அமைந்துள்ள சொகுசு விடுதியான ‘ITC மெமெண்டோஸில்’ இவர்களது திருமணம் நடைபெற உள்ளது. ரசிகர்கள் ஆசையாகச் சூட்டிய ‘வி ரோஷ்’ என்ற பெயரிலேயே தங்களின் திருமணத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
சுமார் 100 விருந்தினர்கள் மட்டுமே பங்கேற்கும் இந்த திருமணத்தில், தெலங்கானா அரசியல் பிரமுகர்கள் மற்றும் சில இயக்குநர்கள் கலந்து கொள்கின்றனர்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாலிபால் விளையாட்டு, நீச்சல் குளத்தில் குளிர்பானங்கள் மற்றும் ஜப்பானிய உணவு வகைகள் அடங்கிய மெனு கார்டு என திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்ட படங்களை விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா ஜோடி பகிர்ந்துள்ளனர்.
கடந்த ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி இவர்களுக்கு ரகசியமாக நிச்சயதார்த்தம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. முற்றிலும் தனிப்பட்ட நிகழ்வாக நடைபெறும் இந்தத் திருமணம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

