இந்தியா

துப்புரவு பணியாளர்களுக்கு ரூ.2 லட்சம் சம்பளம்.. ரூ.6,000 கோடி அரசு ஊழியர்களின் ஊதிய செலவு..!

தெலங்கானா மாநிலம் உருவான 2014-ம் ஆண்டை விட, தற்போது அரசு ஊழியர்களின் ஊதியம் மற்றும் ஓய்வூதியச் செலவு நான்கு மடங்கு அதிகரித்துள்ளது.

தற்போது மாதம் ஒன்றுக்குச் சுமார் ரூ.6,000 கோடி அரசு ஊழியர்களின் ஊதியம் மற்றும் ஓய்வூதிய செலவாக செலவிடப்படுகிறது. மின் வாரிய தலைமை பொறியாளர்கள் ரூ.7 லட்சம் வரையிலும், மூத்த துப்புரவுப் பணியாளர்கள் ரூ.2 லட்சம் வரையிலும் ஊதியம் பெறுவதாக அரசு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

2023-24 சிஏஜி அறிக்கையின்படி, மாநில வருவாயில் 45% ஊதியம், ஓய்வூதியம் மற்றும் கடன் வட்டிக்கே செலவாகிறது. ஜனவரி 2026 நிலவரப்படி அகவிலைப்படி அடிப்படை ஊதியத்தில் 33.67% ஆக உள்ளது.

இருப்பினும், மாநிலத்தின் ஜிஎஸ்டிபி வளர்ச்சி 10%-க்கு மேல் இருப்பதாலும், தனிநபர் வருமானம் உயர்ந்து வருவதாலும் இந்த செலவுகளை சமாளிக்க முடிவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 2025-26 பட்ஜெட்டில் வருவாய் ரூ.2.30 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்