நடிகை ராஷ்மிகா மந்தனாவும், நடிகர் விஜய தேவரகொண்டாகவும் கடந்த சில வருடங்களாகவே காதலித்து வந்தார்கள்.. பெற்றோர்கள் சம்மதம் கிடைத்ததை அடுத்து இருவரும் திருமணம் செய்து முடிவெடுத்தார்கள். இதற்காக ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் உள்ள ஒரு பிரம்மாண்ட மாளிகையில் திருமண ஏற்பாடுகள் நடந்தது.
திருமணம் நடந்த மாளிகை ஒரு நாளைக்கு 91 ஆயிரம் வாடகை என சொல்லப்படுகிறது.. தங்களின் திருமணத்திற்கு அவர்கள் VIROSH என பெயர் வைத்திருந்தனர். திருமணத்துக்கு வருபவர்கள் மொபைல் போன் எடுத்து வரக்கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது.
ஏனெனில் திருமணம் தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் மற்றவர்கள் மூலம் சமூகவலைத்தளங்களில் லீக் ஆகி விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்கள்.
கடந்த 24ஆம் தேதி ஹெல்தி மற்றும் மெஹந்தி கொண்டாட்டம் நடந்தது.. நேற்று சங்கீத் நிகழ்ச்சி நடந்தது.. அதில் இருவரின் குடும்பத்தினரும் உற்சாகமாக கலந்து கொண்டார்கள்.. இன்று ராஷ்மிகாவுக்கும், விஜய தேவரகொண்டாவுக்கும் திருமணம் நடந்தது. வருகிற மார்ச் 4ம் தேதி ஹைதராபாத்தில் பிரம்மாண்ட அளவில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்கவுள்ளது.
அதில், திரையுலகை சேர்ந்த பல பிரபலங்களும் கலந்து கொள்ளவுள்ளனர். அது முடிந்து கிட்டத்தட்ட ஒரு மாதம் இருவரும் ஹனிமூனுக்கு வெளிநாடு செல்ல திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் ராஷ்மிகா – விஜய தேவரகொண்டா திருமண புகைப்படங்கள் வெளியாகியிருக்கிறது.

