சென்னையில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை சூப்பர்-8 சுற்றில், இந்தியா 72 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, அபிஷேக் சர்மாவின் அதிரடி அரைசதம் (55) மற்றும் ஹர்திக் பாண்டியா (50*), திலக் வர்மா (44*) ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 256 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது.
257 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி விளையாடிய ஜிம்பாப்வே அணிக்கு பிரையன் பென்னட் (97*) கடைசி வரை போராடியும் பலன் கிடைக்கவில்லை.
இந்திய பந்துவீச்சில் அர்ஷ்தீப் சிங் சிறப்பாக செயல்பட்டு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜிம்பாப்வே அணி 20 ஓவர்கள் முடிவில் 184 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது.
பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் ஆல்-ரவுண்டராக ஜொலித்த ஹர்திக் பாண்டியா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த மாபெரும் வெற்றி இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

