இந்தியா

திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆகிறாரா ஓபிஎஸ்?!

அதிமுகவில் பலமுறை எம்எல்ஏ, மூன்று முறை முதலமைச்சர், துணை முதல்வர், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என பல முக்கிய பதவிகளை வகித்து வந்த ஓ பன்னீர்செல்வம் தற்போது திமுகவில் இணைந்திருக்கிறார். சில வருடங்களுக்கு முன்பு எடப்பாடி பழனிச்சாமியால் அதிமுகலிருந்து வெளியேற்றப்பட்டார் ஓ.பன்னீர்செல்வம். அதன்பின் அதிமுகவில் மீண்டும் இணைய அவர் எடுத்த முயற்சிகள் நடக்கவில்லை. ஏனெனில், அவரை கட்சிக்குள்ளே விடக்கூடாது என்பதில் பழனிச்சாமி உறுதியாக இருந்ததே அதற்கு முக்கிய காரணம்..

அதிமுகவில் மீண்டும் தான் இணைய முடியாது என்பதை தெரிந்தகொண்ட ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவுக்கு எதிர்க்கட்சியாக இருக்கும் திமுகவில் இணைய முடிவெடுத்தார். அதன்படி இன்று காலை அறிவாலயம் வந்த அவர் திமுக தலைவர் மற்றும் முதல்வர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

அவரோடு அவரின் மகன் ரவீந்திரநாத் மற்றும் அதிமுக எம்எல்ஏ ஐயப்பன் ஆகியோர் இருந்தனர். அவர்களும் திமுகவில் இணைந்தனர். அதன்பின் செய்தியாளரிடம் பேசியவோ பன்னீர்செல்வம் ‘தளபதி ஸ்டாலின் தமிழகத்தை சிறந்த முறையில் ஆட்சி செய்து வருகிறார்.. கடந்த ஐந்து வருடங்களில் திமுக நிறைய சாதனைகளை செய்திருக்கிறது.. திமுகவே மீண்டும் ஆட்சி அமைக்கும்’ என்றெல்லாம் பேட்டி கொடுத்தார்.

இந்நிலையில் அதிமுகவின் முக்கிய பதவிகளில் இருந்த ஓ பன்னீர்செல்வத்துக்கு திமுகவில் என்ன பதவி கொடுப்பார்கள் என்கிற எதிர்பார்ப்பும், கேள்வியும் எல்லோரிடமும் எழுந்திருக்கிறது.. அனேகமாக அவருக்கு திமுக துணை பொதுச் செயலாளர் பதவி கொடுக்கப்படலாம் என்கிற செய்தியும் வெளியே கசிந்திருக்கிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்