ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இடையே நீண்டகாலமாக நிலவி வரும் எல்லை பதற்றம், தற்போது ஒரு முழுமையான போராக மாறும் நிலையை எட்டியுள்ளது.
ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் விமானப்படை வான்வழி தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வரும் நிலையில், அதற்கு பதிலடியாகத் தாலிபான் படையினர் பாகிஸ்தான் நகரங்கள் மீது நவீன ட்ரோன் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக, இஸ்லாமாபாத் அருகே உள்ள முக்கிய ராணுவ நிலைகள் மற்றும் பாகிஸ்தான் ராணுவ அகாடமி மீது தாலிபான்களின் ட்ரோன்கள் தாக்குதல் நடத்தியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாலிபான் படையினர் தாங்கள் 2001-ல் இருந்த பழைய குழு அல்ல என்றும், தற்போது நவீன தொழில்நுட்பங்களுடன் மேம்பட்ட ராணுவமாக திகழ்வதாகவும் எச்சரித்துள்ளனர். இந்த மோதலால் எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், சீனா, ரஷ்யா, கத்தார் மற்றும் மலேசியா போன்ற நாடுகள் உடனடியாக போர் நிறுத்தம் செய்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வலியுறுத்தியுள்ளன.

