சினிமா

விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா திருமணம்: கிலோ கணக்கில் தங்க நகைகள் அணிந்த மணமக்கள்!

திரையுலகின் நட்சத்திர ஜோடிகளான விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோரது திருமணம் நேற்று உதய்பூரில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த திருமணத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது அவர்கள் அணிந்திருந்த பல கிலோ எடையுள்ள பாரம்பரிய ‘டெம்பிள்’ தங்க நகைகள் தான். சுமார் 10 மாதங்கள் கடின உழைப்பில் உருவான இந்த நகைகளை ஹைதராபாத்தை சேர்ந்த ‘ஸ்ரீ ஜூவல்லர்ஸ்’ வடிவமைத்துள்ளது.

ராஷ்மிகா ஒரு தேவதையைப் போல 11 வகையான பாரம்பரிய நகைகளை அணிந்திருந்தார். தென்னிந்திய கட்டிடக்கலையை பறைசாற்றும் வகையில் அமைந்த இந்த நகைகள் ‘நக்ஷி’ வேலைப்பாடுகளுடன் மிளிர்ந்தன. மறுபுறம், விஜய் தேவரகொண்டா ஒரு மன்னரை போல யானை மற்றும் புலி உருவங்கள் பொறிக்கப்பட்ட பிரம்மாண்டமான கழுத்தணிகள், காதணிகள் மற்றும் கையில் தடிமனான கப்புகளை அணிந்திருந்தார்.

பொதுவாக மணமகன்கள் எளிமையாக இருக்கும் நிலையில், விஜய்யின் இந்த ‘மேக்சிமலிஸ்ட்’ லுக் புதிய டிரெண்டை உருவாக்கியுள்ளது. இவர்களின் இந்த ராஜகால திருமண புகைப் படங்கள் தற்போது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகின்றன.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்