உலகளாவிய பொழுதுபோக்கு துறையில் ஒரு வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
பிரபல ஊடக நிறுவனமான வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரி நிறுவனத்தை, சுமார் ரூ. 10 லட்சம் கோடிக்கு அதாவது $110 பில்லியன் மதிப்பிற்கு வாங்க பாராமவுண்ட் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்த மிகப்பெரிய வணிகக் கைப்பற்றலுக்கான போட்டியில் முன்னணியில் இருந்த நெட்ஃபிக்ஸ் நிறுவனத்தின் முயற்சியை தோற்கடித்து, பாராமவுண்ட் இந்த ஒப்பந்தத்தை உறுதி செய்துள்ளது.
இந்த ஆண்டின் பிற்பாதியில் வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தை பாராமவுண்ட் முழுமையாக தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாராமவுண்ட் மற்றும் வார்னர் பிரதர்ஸ் ஆகிய இரண்டு மாபெரும் நிறுவனங்களின் இணைவு, ஓடிடி தளம் மற்றும் உலகத் திரைப்பட சந்தையில் மிகப்பெரிய ஆதிக்கத்தை செலுத்தும் எனத் தெரிகிறது.
பொழுதுபோக்குத் துறையில் புதிய அத்தியாயத்தைப் படைக்கவுள்ள இந்த மெகா டீல், முதலீட்டாளர்கள் மற்றும் சினிமா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

