இந்தியா

பிரதமர் எத்தனை முறை தமிழகம் வந்தாலும் தமிழக மண் பாஜகவுக்கு இடமளிக்காது: செல்வபெருந்தகை

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை உற்சாகமான வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

நூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அபூர்வத் தலைவர் ஸ்டாலின்” என்று புகழ்ந்துள்ள செல்வபெருந்தகை , காலை உணவு திட்டம் உள்ளிட்ட அவரது சமூக நலத்திட்டங்கள் உலகளாவிய பாராட்டை பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மீண்டும் அவரே முதலமைச்சராக வருவார் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

அதேவேளையில், பிரதமர் மோடியின் மதுரை வருகை குறித்து பேசிய செல்வபெருந்தகை , “பிரதமர் சர்ச்சைகளை ஏற்படுத்துபவர்; அவர் எத்தனை முறை தமிழகம் வந்தாலும், ஆறுபடை வீடுகளுக்கு சென்றாலும் முருகப்பெருமான் அவரை மன்னிக்க மாட்டார்” என்று காட்டமாக விமர்சித்துள்ளார்.

அதிமுக-பாஜக கூட்டணி தமிழக உரிமைகளை டெல்லியில் அடகு வைத்துவிட்டதாகவும், தமிழக மண் அவர்களுக்கு ஒருபோதும் இடமளிக்காது என்றும் செல்வபெருந்தகை கூறியுள்ளார். தமிழகத்தை ஒருபோதும் அவர்கள் காலூன்ற விடமாட்டார்கள் என்ற பிரகடனத்தோடு, முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தங்களின் ஆதரவை காங்கிரஸ் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்