சினிமா

மத்திய கிழக்கில் போர் பதற்றம்: துபாயில் சிக்கிய நடிகர் அஜித்துக்கு என்ன ஆச்சு? ரசிகர்கள் கவலை..!

ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி, அமெரிக்க-இஸ்ரேல் வான்வழி தாக்குதலில் கொல்லப்பட்டதை அடுத்து, மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இதன் காரணமாக வளைகுடா நாடுகளின் வான்வெளி மூடப்பட்டு, சர்வதேச விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில் கார் பந்தய பயிற்சிக்காக துபாயில் தங்கியிருக்கும் நடிகர் அஜித்குமாரின் பாதுகாப்பு குறித்து அவரது ரசிகர்கள் மிகுந்த கவலையடைந்தனர்.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா, “நடிகர் அஜித் துபாயில் முற்றிலும் பாதுகாப்பாக உள்ளார். இன்று அவர் சென்னை திரும்ப திட்டமிட்டிருந்தார், ஆனால் விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளதால் பாதுகாப்பான இடத்தில் தங்கியிருக்கிறார். சூழல் சீரானவுடன் அவர் சென்னை திரும்புவார்” என்று தெரிவித்துள்ளார்.

ஈரானில் 40 நாட்கள் துக்கம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்காவுக்கு ஈரான் அதிபர் பெஷேஷ்கியான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். பதிலுக்கு டிரம்ப் விடுத்துள்ள போர் மிரட்டலால் வளைகுடா பிராந்தியத்தில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. அஜித்தின் பாதுகாப்பு குறித்து கவலை அடைந்த ரசிகர்கள் அவர் தற்போது பாதுகாப்பாக இருப்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவரது ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்