இந்தியா

அதிமுக கூட்டணியில் ராமதாஸ்!. அன்புமணி போட்ட 3 கண்டிஷன்கள்!

பாட்டாளி மக்கள் கட்சி இப்போது ராமதாஸ் மற்றும் அன்புமணி என இரண்டு பிரிவுகளாக பிரிந்துவிட்டது. பாமகவுக்கு நான்தான் தலைவர் என்கிறார் அன்புமணி. ராமதாஸோ அதை ஏற்க மறுத்து நீதிமன்றம் சென்றார். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் கருத்தை நீதிமன்றம் கேட்க, 2026 ஆகஸ்ட் மாதம் வரை அன்புமணிதான் பாமகவின் தலைவர் என தேர்தல் ஆணையம் சொல்லிவிட்டது.

ஒருபக்கம், அன்புமணி ராமதாஸ் அதிமுக கூட்டணிக்கு சென்றுவிட்டார். அதோடு, 18 தொகுதிகள் வரை அன்புமணி கேட்டிருக்கிறார். ஒருபக்கம் பாமக இதுவரை எந்த கூட்டணியிலும் இணையவில்லை. ராமதாஸை அதிமுக கூட்டணியில் சேர்க்கக்கூடாது என எடப்பாடி பழனிச்சாமியிடம் கூறினார் அன்புமணி. திமுக கூட்டணிக்கு போகலாம் என்றால் அங்கு விடுதலை சிறுத்தைக் கட்சி இருக்கிறது. திருமாவாளவன் எதிர்ப்பு தெரிவிப்பார்.

எனவே, தவெகவுடன் கூட்டணி அமைப்பது அல்லது தனித்து போட்டியிடுவது என இரண்டு ஆப்ஷன்கள்தான் ராமதாஸுக்கு இருக்கிறது. அதில், அரசியலில் அனுபவம் இல்லாததால் தவெக பக்கம் போக ராமதாஸ் விரும்பவில்லை எனத்தெரிகிறது. ஒருபக்கம், தேமுதிகவும் திமுகவுக்கு போய்விட்டதால் ராமதாஸை அதிமுக கொண்டுவரும் முயற்சியில் எடப்பாடி பழனிச்சாமி இறங்கியிருக்கிறார்.

இது தொடர்பாக அவர் அன்புமணியிடம் பேசியிருக்கிறார். அப்போது நாங்கள்தான் மாம்பழம் சின்னத்தில் போட்டியிடுவோம். ராமதாஸுக்கு மாம்பழ சின்னம் கொடுக்கக்கூடாது, எங்களுக்கு பிறகுதான் ராமதாஸுக்கு தொகுதிகளை ஒதுக்கவேண்டும், ராமதாஸுடன் ஒரே மேடையில் நான் பிரச்சாரம் செய்யமாட்டேன் என 3 கண்டிஷன்களை போட்டிருக்கிறாராம் அன்புமணி. அவர் போட்ட நிபந்தனைகளின்படி ராமதாசை பழனிச்சாமி சமாளித்துவிட்டால் ராமதாஸ் பாமக அதிமுக கூட்டணியில் இடம் பெறும் எனத்தெரிகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்