மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் காரணமாக, பாலிவுட் நடிகை நர்கிஸ் பக்ரி தான் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
துபாயில் தங்கியுள்ள அவர், அங்கிருந்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள பதிவில், அடுத்து என்ன நடக்கும் என்ற அச்சத்தினால் தனக்கு தூக்கமில்லாத இரவுகள் தொடர்வதாக குறிப்பிட்டுள்ளார். ஈரானிய ஏவுகணைகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் இடைமறிக்கப்பட்ட நிலையில், துபாயில் இருவர் காயமடைந்த செய்தி அவரை மேலும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
பாலிவுட் திரையுலகின் சூப்பர்ஹிட் படங்களான ‘ராக்ஸ்டார்’, ‘மெட்ராஸ் கஃபே’ போன்ற படங்களில் நடித்து புகழ்பெற்ற நர்கிஸ், தற்போது நிலவும் இந்த போர் சூழலால் தனது மூளை எப்போதும் விழிப்புடனேயே இருப்பதாகவும், நிம்மதியாக உறங்க முடியவில்லை என்றும் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

