நடிகர் விஜய் துவங்கிய தமிழக வெற்றிக் கழகம் தமிழகத்தில் புதிய அரசியல் சக்தியாக உருவாகி வருகிறது.. அதற்கு முக்கிய காரணம் அடிப்படையில் விஜய் ஒரு பிரபல நடிகர் என்பதால் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.. எனவே இளைஞர்களின் வாக்குகள் தவெகவுக்கு கிடைக்கும் என பரவலாக பேசப்படுகிறது.
ஒரு பக்கம் திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் தவெகவை தூக்கி வைத்து பேச துவங்கியது.. சில நாட்களுக்கு முன்பு ஊடகத்திற்கு பேட்டி கொடுத்த காங்கிரஸ் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரவீன் சக்கரவர்த்தி தவெக தனித்து போட்டாலே 18 சதவீத வாக்குகளை வாங்கும் எனக் கூறினார்.
அதேபோல் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் கூட திமுகவுடன் பேச்சு நடத்திய பின் செய்தியாளிடம் பேசிய போது ’தவெகவுக்கு இளைஞர்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது’ எனக்கு கூறினார். ஒருபக்கம் திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்குமா என்கிற சந்தேகமும் எழுந்தது.. ஏனெனில் திமுக – காங்கிரஸ் இடையேயான தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை இழுபறி நீடித்து வந்தது. ஏனெனில், காங்கிரஸ் 40 தொகுதிகளை கேட்க திமுக 25 தொகுதிகள் கொடுக்க முன்வந்தது.
எனவே காங்கிரஸ் எப்படியும் நமது பக்கம் வரும் என விஜய்யும் காத்திருந்தார். தவெக நிர்வாகிகள் காங்கிஸுடன் தொடர்ந்து பேசி வந்ததாகவும் செய்திகள் வெளியானது. ஏனெனில், ஒரு தேசிய கட்சி தங்களுடன் இணைந்தால் கட்சியின் இமேஜ் உயரம் எனவும் விஜய் கணக்கு போட்டார்.. ஆனால் 28 சட்டமன்ற தொகுதி மற்றும் ஒரு ராஜ்யசபா தொகுதி என்பதை ஏற்றுக்கொண்டு திமுக கூட்டணியில் தற்போது இணைந்துவிட்டது காங்கிரஸ்.
அதாவது தவெகவை காட்டி 3 தொகுதிகளை அதிகமாக பெற்றிருக்கிறது காங்கிரஸ். திமுக கூட்டணியில் காங்கிரஸ் இணைந்தது தவெகவுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. மொத்தத்தில் தவெகவின் நிலைமை ‘வட போச்சே’ என ஆகிவிட்டது.

