இந்தியா

எம்.பி. பதவிக்கு சதீஷுக்கு அருகதை இல்லையா?!. கடுப்பான பிரேமலதா!

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திமுகவுடன் கூட்டணி அமைத்திருக்கிறது தேமுதிக. கூட்டணி தொடர்பாக அதிமுக திமுக இரண்டு கட்சிகளிலும் பேரம் பேசி வந்த தேமுதிக இறுதியில் திமுகவுடன் இணைந்துவிட்டது.தேமுதிகவுக்கு ஒரு ராஜ்ய சபா சீட் கொடுப்பதாக திமுக ஒப்புக்கொண்டதால்தான் இந்த முடிவை எடுத்திருக்கிறார் பிரேமலதா. கட்சியில் பல வருடங்களாக உழைத்த பலரும் இருக்கும்போது தனது சகோதரருக்கு பதவி வாங்கி கொடுத்திருக்கிறார் என்கிற விமர்சனம் அவர் மீது எழுந்திருக்கிறது.

இந்நிலையில், இது தொடர்பாக செய்தியாளிடம் விளக்கமளித்த பிரேமலதா கட்சி ஆரம்பித்தது முதல் நாளிலிருந்து சுதீஷ் கட்சிக்காக பாடுபட்டிருக்கிறார். அவர் உழைக்கவில்லையா? கேப்டனுக்கும் எனக்கும் துணை நிற்கும் அவருக்கு சீட் கொடுக்க கூடாதா?.. அந்த எம்பி பதவியில் அமர அவருக்கு அருகதை இல்லையா? உரிமையில்லையா? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

மேலும் கேப்டனின் ஆசிர்வாதத்துடன் தேமுதிகவில் அனைவரின் ஒத்துழைப்புடன் எல்கே சதீஸ் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். ஏற்கனவே இது நடந்திருக்க வேண்டியது.. எதிர்பாராதவிதமாக காலதாமதம் ஆகிவிட்டது.. முதல் முறையாக இந்திய அளவில் ஜனநாயக கடமையாற்ற சுதீஷுக்கு கிடைத்துள்ள வாய்ப்புக்கு தேமுதிக சார்பில் வாழ்த்துக்கள்’ என அவர் கூறியிருக்கிறார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்