கனடா

கனடாவில் கடவுச்சீட்டு கட்டண உயர்வு ; மார்ச் 31 முதல் அமல்

கனடாவில் புதிய கடவுச்சீட்டுக்கான கட்டணங்கள் இந்த வசந்த காலம் முதல் உயர்த்தப்படுகின்றன.

2026 மார்ச் 31 திகதி முதல் பெரும்பாலான கடவுச்சீட்டு மற்றும் பயண ஆவணக் கட்டணங்கள் அதிகரிக்கும் என கனடிய அரசு அறிவித்துள்ளது.

கனடிய குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

“பணவீக்கம் மற்றும் பாதுகாப்பான பயண ஆவணங்களை தயாரிக்கும் செலவு அதிகரித்துள்ளதால், மேலும் விண்ணப்ப செயல்முறையில் கனடியர்களுக்கு வழங்கப்படும் சேவைகளை நிலைத்தன்மையுடன் பராமரிக்க வேண்டிய அவசியம் காரணமாக இம்மாற்றம் மேற்கொள்ளப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 ஆண்டு செல்லுபடியாகும் சாதாரண வயது வந்தோருக்கான கடவுச்சீட்டு: 120 டொலரிலிருந்து 122.50 டொலராக (2.50 டொலர் உயர்வு) 10 ஆண்டு கடவுச்சீட்டு: 160 டொலரிலிருந்து 163.50 டொலராக (3.50 டொலர் உயர்வு) 5 ஆண்டு குழந்தைகள் கடவுச்சீட்டு: 57 டொலரிலிருந்து 58.50 டொலராக (1.50 டொலர் உயர்வு) 2013 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இது முதல் முறையாக கட்டண உயர்வு மேற்கொள்ளப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது.

இனிமேல், “சேவை கட்டண சட்டம்” (Service Fees Act) அடிப்படையில் ஆண்டுதோறும் பணவீக்கத்துடன் இணங்க கட்டணங்கள் திருத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் வசிக்கும் கனடியர்கள் 10 ஆண்டு வயது வந்தோருக்கான கடவுச்சீட்டு: 260 டொலரிலிருந்து 266.25 டொலராக (6.25 டொலர் உயர்வு) • 5 ஆண்டு வயது வந்தோருக்கான கடவுச்சீட்டு: 190 டொலரிலிருந்து 194.25 டொலராக (4.25 டொலர் உயர்வு) அவசர சேவை, வார இறுதி அல்லது அரச விடுமுறை நாள்களில் சேவை, தற்காலிக அல்லது இடைக்கால கடவுச்சீட்டு போன்ற சேவைகளுக்கும் கட்டண உயர்வு அமல்படுத்தப்படுகின்றது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

கனடா

சுவீடன் மன்னர் கனடா விஜயம்

சுவீடன் மன்னர் கார்ல் XVI கஸ்டாஃப் மற்றும் மகாராணி சில்வியா நவம்பர் 18ஆம் திகதி கனடாவுக்கு விஜயம் செய்யஉ ள்ளனர். கனடா ஆளுநர் நாயகம் மேரி சைமன்
கனடா

கனடாவில் ஹாலோவின் இனிப்பு பையில் தங்க மோதிரம்

கனடாவின் வின்னிபிக் பகுதியில் ஹாலோவின் இனிப்பு பண்டங்கள் காணப்பட்ட பையொன்றில் தங்க மோதிரம் ஒன்று, பெண்ணுருவருக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. தனது மகளின் ஹாலோவின் இனிப்பு பண்ட பொதியில் இவ்வாறு