2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடர் எப்போது தொடங்கும் என்ற ஆவலில் காத்திருக்கும் ரசிகர்களுக்கு ஒரு முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான அட்டவணையை இரண்டு கட்டங்களாக வெளியிட ஐபிஎல் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, முதல் கட்ட அட்டவணை மார்ச் 6 அல்லது 7-ம் தேதிகளில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகம், மேற்கு வங்கம், மற்றும் அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தல் தேதிகளை கருத்தில் கொண்டு, இரண்டாவது கட்ட அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும்.
பாதுகாப்பு பணிகள் மற்றும் தேர்தல் நடைமுறைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தேர்தல் காரணமாக போட்டிகள் வெளிநாடுகளுக்கு மாற்றப்படுமா அல்லது இந்தியாவிலேயே தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் போட்டிகள் நடைபெறாதா? என்ற விவாதங்களுக்கு மத்தியில், இந்த இரண்டு கட்ட அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

