சினிமா

ரஜினி படம் ஸ்டார்ட்!.. போட்டோ போட்டு செம ஹைப் ஏத்துறாங்களே!

ஜெயிலர் 2க்கு பின் சிபிச் சக்கரவர்த்தி இயக்கத்தில் ரஜினி ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.  இந்த படத்தை ரஜினியின் நண்பரும் நடிகருமான கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இது ரஜினி 173-வது திரைப்படமாகும்.

இந்த படத்தை முதலில் சுந்தர்.சிதான் இயக்கவிருந்தார். ஆனால் சில காரணங்களால் அவர் இந்த படத்திலிருந்து வெளியேறிவிட சில இளம் இயக்குனர்களுடன் கதை கேட்டு இறுதியாக டான் படத்தை இயக்கிய சிபி சக்ரவர்த்தியை ஓகே செய்தார் ரஜினி.

இந்நிலையில்தான் இந்த படத்தின் வேலைகள் தற்போது தொடங்கியிருக்கிறது. இந்த படத்தின் பைண்டட் ஸ்கிரிப்டை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் முக்கிய நபரான மகேந்திரனிடம்  சிபி சக்ரவர்த்தி கொடுக்கும் புகைப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ‘ஆரம்பிக்கலாமா’ என பதிவிட்டு ஹைப் ஏற்றியிருக்கிறார்கள்.

மேலும் இந்த படம் 2027 பொங்கலுக்கு வெளியாகும் எனவும் செய்திகள் கசிந்துள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்